விஜய் சேதுபதி நடித்த "ஏஸ்" படத்தின் "பார்வை தனி" வீடியோ பாடல் வெளியீடு

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படம் கடந்த 23ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-05-29 14:40 IST

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது.

விஜய் சேதுபதி 51-வது படமான 'ஏஸ்' திரைப்படத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். 'ஏஸ்' படம் கடந்த 23ம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'ஏஸ்' படத்தில் இடம் பெற்ற 'பார்வை தனி' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்