விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடக்கம்
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் ஏஸ் படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'டிரெயின், தலைவன் தலைவி' போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்'
மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி-பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாக உள்ள இப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் உள்ளது.