திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.;

Update:2025-11-13 09:28 IST

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. அரசியல் அதிரடி படமாக உருவாகி உள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.மேலும் படத்தின் ஆடியோ உரிமைகள் ரூ.35 கோடிக்கு போயிருக்கிறது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.110 கோடிக்கு வாங்கி உள்ளது.

இதுவரை படத்தின் மொத்த வருவாய் ரூ.325 கோடியை தாண்டி இருக்கிறது. சாட்டிலைட் மற்றும் பிற பிராந்திய உரிமைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுவும் உறுதி செய்யப்பட்டால் படத்தின் வருவாய் ரூ.400 கோடியை நெருங்கும். படம்வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய வியாபாரத்தை பெற்று சாதனை படைத்து வருகிறது ‘விஜய்’யின் ஜனநாயகன்.

Tags:    

மேலும் செய்திகள்