மேடையில் மயங்கி விழுந்த விஷால்...தற்போது எப்படி இருக்கிறார்?- வெளியான தகவல்
நடிகர் விஷால் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது குழுவினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.;
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நேற்று நடந்த மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்துகொண்டிருந்தார். அப்போது அவர் மேடையில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதானால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் விஷால் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தற்போது விஷால் நல்ல உடல் நலத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். நேற்று மதியம் அவர் உணவைத் தவிர்த்து, ஜூஸ் மட்டுமே குடித்ததால் இரவு மயக்கம் ஏற்பட்டது. சரியான நேரத்தில் உணவு உண்ணுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அனைவரின் அக்கறைக்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றி' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.