இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள் (11.08.25 முதல் 17.08.25 வரை)

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பதை காண்போம்.;

Update:2025-08-14 21:43 IST

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.





படங்கள்

ஓடிடி தளங்கள்

அஃகேனம்

ஆகா தமிழ்

யாதும் அறியான்

சிம்பிலி சவுத்

குட் டே

சன் நெக்ஸ்ட்

கே.எஸ்.கே.(ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா)

ஜீ5

அஃகேனம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து, தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார்.தற்போது 'அஃகேனம்' என்ற படத்தில் நடித்துள்ளார். உதய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார். பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இப்படம் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியானது.

யாதும் அறியான்

செந்தூரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கோபி, தற்போது 'யாதும் அறியான்' என்ற சைக்கோ திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் லீட் ரோலில் அறிமுக நாயகன் தினேஷ் நடிக்க அவருடன் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி வெளியானது.

குட் டே

இயக்குனர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் டே. இந்த படத்தினை பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்துள்ளார். படத்திற்கான திரைக்கதையை பூர்ணா எழுதியுள்ளார். இதில், பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஜூன் 17-ம் தேதி வெளியானது.

கே.எஸ்.கே.(ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா)

ஜே.எஸ்.கே சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீதிமன்ற வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த சினிமாவில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்