நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 11.04.25

நாளை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்களின் காணலாம்.;

Update:2025-04-10 08:36 IST

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை (11.04.25) எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள்ஓ.டி.டி தளங்கள்
பெருசுநெட்பிளிக்ஸ்
ஸ்வீட் ஹார்ட்ஜியோ ஹாட்ஸ்டார்
சாவாநெட்பிளிக்ஸ்
கோர்ட்நெட்பிளிக்ஸ்
சோரி 2அமேசான் பிரைம்

ஹாக் சீசன் 4

ஜியோ ஹாட்ஸ்டார்

பைங்கிலி - 

சிம்பிலி சவுத், மனோரமா மேக்ஸ்

பிரவின்கூடு ஷப்பு

சோனி லிவ்

தி லெஜண்ட் ஆப் ஹனுமான்' சீசன் 6

ஜியோ ஹாட்ஸ்டார்

'ஸ்வீட் ஹார்ட்'

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் 'ஸ்வீட் ஹார்ட்'. இதில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

'பெருசு'

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் 'பெருசு'. இந்த படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருந்த இப்படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கியுள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'சாவா'

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி. ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'கோர்ட்'

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் நானி தயாரித்துள்ள படம் 'கோர்ட்' . நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் உருவான 'கோர்ட்' படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'சோரி 2'

விஷால் இயக்கத்தில் 2021ல் வெளியான படம் `சோரி'. இதில் கர்ப்பிணி பெண், தன்னையும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையையும் காப்பாற்ற போராடுவது கதை. தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் ஏழு வயதான தன் குழந்தையை காக்க அப்பெண் போராடுவதே கதை. இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

இதை தவிர, ஜியோ ஹாட்ஸ்டாரில் ஹாக் சீசன் 4 மற்றும் தி லெஜண்ட் ஆப் ஹனுமான்' சீசன் 6, சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் `பைங்கிலி' படமும், சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் `பிரவின்கூடு ஷப்பு ' ஆகிய படங்கள் நாளை ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆக உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்