''ஓடும் குதிரை சாடும் குதிரை'' - ஓடிடியில் ''லோகா'' நடிகையின் புதிய படம்...எதில், எப்போது பார்க்கலாம்?
லோகா வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு, கல்யாணியின் மற்றொரு படமான ஓடும் குதிரை சாடும் குதிரை வெளியானது.;
சென்னை,
கல்யாணி பிரியதர்ஷனின் சூப்பர் ஹீரோ படமான ''லோகா: சாபடர் 1 - சந்திரா'' மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. ரூ. 270 கோடிக்கு மேல் வசூலித்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த மலையாளப் படமாக மாறி இருக்கிறது.
இதற்கிடையில், லோகா வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு, கல்யாணியின் மற்றொரு படமான ஓடும் குதிரை சாடும் குதிரை வெளியானது.
பகத் பாசில் கதாநாயகனாக நடித்த இந்தப் படம், லோகாவின் மிகப்பெரிய வெற்றி மற்றும் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் காரணமாக பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது.
தற்போது இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி,''ஓடும் குதிரை சாடும் குதிரை'' வருகிற 26 முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
அல்தாப் சலீம் இயக்கிய இந்த படத்தில், ரேவதி பிள்ளை, லால், வினய் போர்ட், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மோகன்லாலின் ''ஹிருதயபூர்வம்'' படமும் அதே நாளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.