இந்த வாரம் ஓடிடியில்...3 நட்சத்திர ஹீரோக்களின் படங்கள்

திரையரங்குகளில் படங்களை தவறவிட்டவர்கள் இப்போது வீட்டிலேயே வசதியாக பார்க்கலாம்;

Update:2025-05-26 13:42 IST

சென்னை,

இந்த வாரம், 3 நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதலில், சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'சிக்கந்தர்'  . இப்படம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை மே 25, 2025) நெட்பிளிக்ஸில் வெளியானது. திரையரங்குகளில் அதைத் தவறவிட்டவர்கள் இப்போது வீட்டிலேயே வசதியாக பார்க்கலாம்.

அடுத்து, நேச்சுரல் ஸ்டார் நானி நடித்த பிளாக்பஸ்டர் படமான ஹிட் 3. இப்படம் வருகிற 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இறுதியாக, சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ. இப்படம் வருகிற 31-ம் தேதி பல மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்