ஓடிடியில் வெளியாகும் வடிவேலுவின் “மாரீசன்” படம்... எங்கு, எப்போது பார்க்கலாம்?

வடிவேலு, பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ படம் வருகிற 22ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update:2025-08-17 14:43 IST

சென்னை,

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் ‘மாரீசன்’ திரைப்படம் கடந்த ஜூலை 25ம் தேதி வெளியானது. இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரீசன் திரைப்படம் உலகளவில் ரூ.9 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மாரீசன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 22ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்