கோவில்பட்டி புதுக்கிராமம் மாதா கோவில் சப்பர பவனி

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மும்மதத் தலைவர்கள் பிரார்த்தனை செய்து சப்பர பவனியை துவக்கி வைத்தனர்.;

Update:2025-10-08 14:09 IST

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை திருப்பலியும், நற்கருணை ஆசியும் நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு மேல் சங்கரன்கோவில் வட்டார அதிபர் கென்னடி அடிகளார், புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தை குழந்தை ராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.

அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பரிசுத்த செல்வ மாதா அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு சப்பர பவனி நடைபெற்றது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக புதுக்கிராமம் சுடலை மாடசாமி கோவில் தலைவர் மகேஷ் பாலா, கோவில் பூசாரி சோலை முருகன், கோவில்பட்டி டவுன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் முகமது இப்ராஹிம் பைசி மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து பிரார்த்தனை செய்து, சப்பர பவனியை தொடங்கி வைத்தனர். 

சப்பர பவனியானது புதுக்கிராமம் மெயின்ரோடு, தெற்கு புதுக்கிராமம் 3-வது தெரு வழியாக கடலையூர் மெயின் ரோடு, பங்களாத்தெரு வளைவு வரை சென்று மீண்டும் புதுக்கிராமம் 2-வது தெரு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்