அனிச்சம்பாளையம் செல்வ விநாயகர்- எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத்‌ தொடர்ந்து மூலவ மூர்த்திகளுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2025-10-26 15:59 IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அனிச்சம்பாளையத்தில் செல்வ விநாயகர் மற்றும் எல்லம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், விமானங்கள் கண் திறப்பு, விக்ரகங்கள் பிரதிஷ்டையும், பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை யாக வேள்வி, கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

அதனை‌ தொடர்ந்து மூலவ மூர்த்திகளான செல்வ விநாயகர், எல்லம்மாள், பூர்ணா, புஷ்கலா சமேத அடைக்கலம் காத்த‌ ஐயனாரப்பன் மற்றும் கருப்பண்ணசாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் அனிச்சம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்