திருப்பதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம்

ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்ற மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.;

Update:2025-09-28 11:16 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதி உலா முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் மற்றும் பிற நறுமணப் பொருட்களால் சம்பிரதாயமாக ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதற்காக, அந்த மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டபோது உற்சவர்களுக்கு பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, வெட்டிவேர், மஞ்சள் தண்டுகள், உலர் திராட்சை, ஏலக்காய், துளசி இலைகள் மற்றும் ரோஜாக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்நாபன திருமஞ்சனத்தின்போது வேத அறிஞர்கள் சதுர்வேத பாராயணம் பாடல்களை வாசித்தனர்.

உற்சவர்கள் சுகமடைவர்

வாகன சேவைகளின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக சென்று சோர்வடைபவரான மலையப்பசாமி திருமஞ்சனத்தின் மூலம் சுகமடைவர் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

ஸ்நாபன திருமஞ்சனத்தில் திருமலை சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்