சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா 7-ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்
பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.;
திருப்பதி:
திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் விழாவின் 7-ம் நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வாகன சேவைக்கு முன்னால் மங்கல வாத்தியங்கள் முழங்க நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பஜனை குழுக்கள், வாகன சேவையின் மகத்துவத்தை புகழ்ந்து பாடியபடி சென்றனர்.