தஞ்சை: திருமண்டங்குடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-10-31 15:17 IST

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை வளாகத்தில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி சுப்பிரமணியர், காமாட்சி அம்மன், பேச்சியம்மன், வீரனார், முனீஸ்வரர், அய்யனார் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது.

யாக சாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக நிகழ்வில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைப்பெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின், மேள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

அதனை தொடர்ந்து கற்பக விநாயகர் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும், கோவிலின் ராஜகோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்