தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்திற்கு நிகராக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.;
சென்னை,
கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஆண்டு தொடக்கத்தின் முதலே தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனையானது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,760-க்கு விற்பனையானது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்தது.
இந்தநிலையில், சென்னையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.580 உயர்ந்து ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ,2,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை: இன்றைய நிலவரம்
ஒரு கிராம் (22 காரட்)- ரூ.12,830 (+ரூ.70)
ஒரு சவரன் (22 காரட்)- ரூ.1,02,640 (+ரூ.5,80)
வெள்ளி விலை: இன்றைய நிலவரம்
ஒரு கிராம்- ரூ.271 (+ரூ.5)
ஒரு கிலோ- ரூ.2.71 லட்சம் (+ரூ.5,000 )