வரலாறு காணாத உச்சம் கண்ட பங்கு சந்தைகள்

மும்பை பங்கு சந்தையில் அதானி போர்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், பாரத வங்கி, கோடக் மகிந்திரா வங்கி பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.;

Update:2025-12-01 12:38 IST

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைந்து காணப்பட்டது. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் 452.35 புள்ளிகள் உயர்ந்து 86,159.02 புள்ளிகளாக உள்ளது.

இதனால், அதானி போர்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், பாரத வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.85 புள்ளிகள் உயர்ந்து 26,325.80 புள்ளிகளாக இருந்தது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுகளில் இந்திய பொருளாதார நிலை, எதிர்பார்த்த 8.2 சதவீதம் என்ற அளவை விட அதிகரித்து இருந்தது. இது 6 காலாண்டுகளில் விரைவான வளர்ச்சியாகும். இதனால், பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்கள் இன்று அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதேபோன்று ஜி.எஸ்.டி. வரி குறைப்பும், நுகர்வோரின் பொருட்களை வாங்கும் சக்தியை அதிகரித்து உள்ளது. இதுபோன்ற காரணிகள், அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர உதவியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்