ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க
பி.இ.,பி.டெக், எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.;
சென்னை,
சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்: ஜூனியர் இன்ஜினியர் (ஒருங்கிணைந்த மெட்டீரியல் மேலாண்மை) பிரிவில் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,பி.டெக், எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 11.10.2025ன் படி 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி காலம்: ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai - 600 054.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 11.10.2025
கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள: ddpdoo.gov.in