சத்தீஸ்கரில் 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் சரண்
2026-ம் ஆண்டுக்குள் நக்சலைட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் பகுதி மத்தியபிரதேசம், மராட்டியம் தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டிய சில பகுதிகளை உள்ளடக்கியது. சத்தீஷ்கார் மாநிலத்தில் நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் நக்சலைட்டை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டு மாநில அரசு உதவியுடன் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதனால் ஆயரக்கணக்கான நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக பல்வேறு நக்சலைட்டு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 23 பெண்கள் உட்பட 103 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அரசின் மறுவாழ்வுக் கொள்கையின் கீழ், சரணடைந்த இவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.