சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி; 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பருவ மழையின்போது விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.;

Update:2025-06-22 17:08 IST

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் பருவ மழையின்போது விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டது.

அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அம்மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பயிர் நிவாரணத்தில் மோசடி நடைபெறுவதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை குழுவை கலெக்டர் அமைத்தார். அந்த குழு நடத்திய விசாரணையில் விவசாயிகளுக்கு வழக்கவேண்டிய பயிர்களுக்கான நிவாரணத்தில் 40 கோடி ரூபாய் மோசடி நடத்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் 11 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகங்களில் ஏற்கனவே சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்