மராட்டியம்: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - 12 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-08-28 04:00 IST

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் கட்டிட விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, அம்மாநிலத்தின் பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு நேற்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்