கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளச்சாராயம் விற்ற நபரை தேடி வருகின்றனர்.;

Update:2025-09-16 21:49 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ஜன்கிர் - சம்பா மாவட்டம் கார்கி கிராமத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். இந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த சுராஜ் (வயது 30), மனோஜ் கஷ்யப் (வயது 38) ஆகியோர் நேற்று காலை வாங்கி குடித்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த இருவரும் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளனர். இருவரையும் மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளச்சாராயம் விற்ற நபரை தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்