உ.பி: காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை சேர்ந்த 3 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;

Update:2024-12-23 11:50 IST

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உ.பி. மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில்  காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே., ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விரேந்திர் சிங், ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் குருவீந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்ட்டரில்  2 போலீசார் காயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்