4 நாட்கள், 65 கி.மீ. நீளத்திற்கு நீண்ட வரிசை; ஊர்ந்து செல்லும் வாகனங்கள்... பீகாரில் அவலம்

30 மணிநேரத்தில் 7 கி.மீ. தொலைவுக்கே பயணித்து உள்ளேன் என வாகன ஓட்டுநர் ஒருவர் கூறினார்.;

Update:2025-10-08 21:56 IST

பாட்னா,

பீகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக 65 கி.மீ. நீளத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், சேறு சகதி மற்றும் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி காணப்படுவது ஆகியவற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதுபற்றி லாரி ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, கடந்த 30 மணிநேரத்தில் 7 கி.மீ. தொலைவுக்கே பயணித்து உள்ளேன். சுங்க சாவடி கட்டணம் மற்றம் வரி கட்டியபோதும், இதில் சிக்கி கொண்ட எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றார். இதனால், அவர்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்