ஆந்திராவில் 600 அடி உயர ராமர் சிலை; திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு
ஆந்திராவில் 600 அடி உயர ராமர் சிலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.;
அமராவதி,
ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டாவை தேசிய சுற்றுலா மற்றும் ஆன்மீக மையமாக மேம்படுத்த திருப்பதி தேவஸ்தானம் நியமித்த நிபுணர் குழு முன்மொழிந்துள்ளது. கடப்பா ரேணிகுண்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை-மும்பை ரெயில் பாதையின் நடுவில் ஒரு குளம் உள்ளது.
அதில் ஒரு உயரமான ராமர் சிலை நிறுவப்பட வேண்டும் என்றும். தரிசனத்திற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் வியக்கும் வகையில் இந்தப் பகுதியை அழகாக மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் படி ராமய்யா க்ஷேத்திரம் அருகே உள்ள தடாகத்தின் நீரின் நடுவில் 600 அடி உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.