திடீரென தீப்பற்றிய கார்... துரிதமாக செயல்பட்ட போலீசார்

மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.;

Update:2025-02-19 11:18 IST

பாட்னா,

பீகார் மாநிலம் சிக்கந்தர்பூர் கோசியை சேர்ந்தவர் சுனில் குமார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பினார். அவர் பிற்பகல் 2.50 மணியளவில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரில் தீ ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் தீயை கவனித்தவுடன் மீட்பு பணியில் விரைந்தனர்.

அவர்கள் உடனடியாக வாகனத்தில் இருந்த 4 பேரையும் மீட்டனர். இதையடுத்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் ஆனால் இதில் கார் தீயில் எரிந்து நாசமானது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்