10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 19 முறை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் - பகீர் தகவல்கள்

சாமுண்டிமலையில் நடந்த தெப்ப உற்சவ விழாவையொட்டி சிறுமி, பெற்றோருடன் பலூன் விற்பனை செய்தாள்.;

Update:2025-10-12 21:48 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன், மைசூருவில் நடந்த தசரா விழாவையொட்டி பலூன் விற்பனை செய்ய வந்திருந்தாள். கடந்த 8-ந்தேதி மைசூரு சாமுண்டிமலையில் நடந்த தெப்ப உற்சவ விழாவையொட்டி சிறுமி, பெற்றோருடன் பலூன் விற்பனை செய்தாள்.

பின்னர் இரவில் பெற்றோர், சிறுமி மற்றும் அவர்களுடன் பொம்மை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்க வந்திருந்த 50 வியாபாரிகளுடன் மைசூரு தசரா கண்காட்சி மைதானத்தில் படுத்து தூங்கியுள்ளனர். அந்த சமயத்தில் மைசூரு அருகே சித்தலிங்கபுராவை சேர்ந்த கார்த்திக் (வயது 31) என்ற வாலிபர் சிறுமியை கடத்திச் சென்று, அருகில் உள்ள புதரில் வைத்து ஆடைகளை அவிழ்த்து எறிந்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருந்தார். இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் தலைமறைவாக இருந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.

அந்த சமயத்தில் அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதனால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். தற்போது கார்த்திக் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில் பகீர் தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

அதாவது, சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகே அவர் சிறுமியை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்த பிறகு சிறுமியை இடுப்பு பகுதியிலேயே 19 முறை கத்தியால் குத்திக் கொன்றதும் அதில் தெரியவந்துள்ளது.

மேலும் கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய மருத்துவ பரிசோதனையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற போது குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது கார்த்திக் துப்பாக்கி குண்டு காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால், அவர் குணமடைந்ததும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்