ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் ஒரு எம்எல்ஏ போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.;

Update:2025-09-08 22:57 IST

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஒருவர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மேராஜ் மலிக்(37) இன்று அந்த சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார். இதற்கு ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் டோடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எம்எல்ஏ மேராஜ் மலிக்.. பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் ஒரு எம்எல்ஏ போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறையாகும். இச்சட்டத்தின்கீழ், எவ்வித புகாரும் இல்லாமல் ஒருவர் மீது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதி தடுப்புக்காவலில் இருக்கச் செய்யலாம். 

Tags:    

மேலும் செய்திகள்