ஆமதாபாத் விமான விபத்து நெஞ்சை நொறுக்கும் பேரிடர்; ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிர்ச்சி

பாதிக்கப்பட்டவர்களுடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.;

Update:2025-06-13 04:07 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது. உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தலைவர்கள் கடும் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளனர்.

அந்தவகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில், 'இது (விமான விபத்து) ஒரு நெஞ்சை நொறுக்கும் பேரிடர். எனது எண்ணங்களும், பிரார்த்தனையும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருக்கிறது. விவரிக்க முடியாத இந்த துயரமான நேரத்தில் அவர்களுடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது' என குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்