அரபு நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கிய ஏர் இந்தியா

இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது.;

Update:2025-06-24 21:00 IST

டெல்லி,

இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளும் தங்கள் வான்பரப்பை மூடின. அதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விமான நிறுவனங்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தை ரத்து செய்தன.

இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்