உடைக்கப்பட்ட அசோக சின்னம் - ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

தர்காவின் கல்வெட்டில், அசோக சின்னம் இருந்ததை கண்ட இஸ்லாமியர்கள் அதை சேதப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.;

Update:2025-09-07 10:35 IST

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் திறக்கப்பட்ட தர்காவின் கல்வெட்டில், அசோக சின்னம் இருந்ததை கண்ட இஸ்லாமியர்கள் அதை சேதப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் தர்கா, ஜம்மு காஷ்மீர் வக்பு வாரியத்தால் சீரமைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை தேதி திறந்துவைக்கப்பட்டது. அதன் கல்வெட்டில், இந்திய தேசிய சின்னங்களில் ஒன்றான அஷோக சக்கரம் பொறிக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள், அசோக சின்னத்தை சேதப்படுத்தினர்.

இதன் வீடியோ வைரலான நிலையில், பாஜகவினர் இது ஒரு தீவிரவாத தாக்குதல் என கூறி போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் சின்னத்திற்கு அவப்பெயர் உண்டாக்கியதை பொறுத்துக்கொள்ளமுடியாது எனவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா கூறியுள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, ஒரு ஆன்மீக தளத்தில் எதற்கு நாட்டின் சின்னம் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுவரை எந்த ஆன்மீக தளத்திலும் இது போன்ற இந்திய சின்னங்கள் தென்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்