சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய சொகுசு கார்; 5 பேர் படுகாயம்
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய உட்சவ் சேகரை கைது செய்தனர்.;
டெல்லி,
தலைநகர் டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள சிவா காலனியில் உள்ள சாலையோரம் நடைமேடைப்பகுதியில் சிலர் கடந்த 9ம் தேதி உறங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1.45 மணியளவில் அந்த சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் திடீரென சாலையோரம் உள்ள நடைமேடை மீது ஏறியது. இதில், நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியது. இந்த சம்பவத்தில் சாலையோரம் படுத்து உறங்கிக்கொண்டிருந்த 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் டிரைவர் உட்சவ் சேகர் (வயது 40) என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். அவர் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய உட்சவ் சேகரை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.