ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.;

Update:2025-06-21 15:14 IST

டெல்லி,

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட மொத்தம் 275 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 3 மூத்த அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், அனுமதிக்கப்பட்ட பணி நேரத்தை தாண்டி விமானத்தை விமானிகள் இயக்க அனுமதித்தல், விமான பணியாளர்களுக்கு வேலையில் போதிய அவகாசம் வழங்காதது, பணிநேரத்தை அதிகரித்தல், அடிக்கடி பணி வழங்குதல் உள்பட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக 3 மூத்த அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்