மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 350 விமானங்கள் தாமதம்

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.;

Update:2025-04-12 16:33 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நேற்று திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், மோசமான வானிலையால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 350 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் சாதமான சூழல் இல்லாததால் பல்வேறு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். இருப்பினும் நிலைமை தற்போதும் கொஞ்சம் சீராகி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்