கிராமத்திற்குள் புகுந்த கரடி; பொதுமக்கள் அச்சம்

கிராமம் ரந்தம்பூர் தேசிய பூங்காவுக்கு அருகே அமைந்துள்ளது.;

Update:2025-06-01 12:38 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் நாகவ்ர் மாவட்டம் பஜோலி கிராமம் ரந்தம்பூர் தேசிய பூங்காவுக்கு அருகே அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மிக அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் அவ்வப்போது சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகள் நுழைவது வழக்கம்.

இந்நிலையில், பஜோலி கிராமத்தில் நேற்று இரவு கரடி புகுந்தது. அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த உணவு பொருட்கள், பால் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளது. கரடி ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். ஊருக்குள் சுற்றித்திரிந்த கரடி பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்க கிராமத்தில் கூண்டு வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்