பீகாரில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் பலி

பீகாரில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-02-26 09:02 IST

பாட்னா,

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டுவிட்டு சிலர் பஸ்சில் சமஸ்திபூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பச்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த பஸ்சும், பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்