மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான்
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.;
லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் இன்று பங்கேற்றார். அவர் சீத்தானந்த் சரஸ்வதி என்ற சாமியாரை சந்தித்து ஆசிபெற்றார். மேலும், மகா இந்து யாத்திரையான இந்நிகழ்ச்சி, உலக அமைதி, ஒற்றுமை, சேவையின் கலங்கரை விளக்கமாக உள்ளதாக ஆரிப் தெரிவித்தார்.