பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

பீகாரில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல் அமைச்சராக நிதிஷ்குமார் உள்ளார்.;

Update:2025-10-06 09:48 IST

புதுடெல்லி,

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிவிகிறது.

இன்று மாலை செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்கிறார்கள். அப்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது. பீகாரில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல் அமைச்சராக நிதிஷ்குமார் உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்