பீகாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் - தேர்தல் ஆணையம்

பீகாரில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.;

Update:2025-08-24 18:12 IST

புதுடெல்லி,

பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நடைபெற்றது..இதில் சுமர் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் கார்டை ஆவணமாக கொடுத்து பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பட்டியல் பற்றி ஏதேனும் ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவவர்களுக்கு செப்.1ம் வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்து இருந்தது.

இந்நிலையில் பீகாரில் 98.2 சதவீதம் வாக்காளர்களின் அடையாள ஆவணங்கள் பெறப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மேலும் கூறியதாவது;கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களிடம் இருந்து அடையாள ஆவணங்கள் பெறப்பட்டன. இதுவரை 98.2 சதவீதம் வாக்காளர்கள், தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர். செப்டம்பர் 1-ம் தேதிக்குள் எஞ்சிய வாக்காளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்துக் கொள்ளலாம். வழக்கமாக வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை மட்டுமின்றி, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போதும் சமர்ப்பிக்க தவறியவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்