கேரளா: பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்

கேரளாவில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.;

Update:2025-03-24 23:45 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை  கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 179 பேர் பயணித்தனர்.புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், மாற்று விமானம் மூலம் பயணிகள் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்