புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;
புதுச்சேரி,
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியின் இல்லத்திற்கு இன்று இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள முதல் மந்திரி ரங்கசாமியின் இல்லத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை கவர்னர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.