கேரள விமான நிலையத்தில் 7 நாட்களாக நிற்கும் இங்கிலாந்து போர் விமானம் - காரணம் என்ன?
விமானத்தின் எரிபொருள் குறைவாக இருந்தது குறித்து விமானி அறிந்தார்.;
திருவனந்தபுரம்,
அரப்பிக்கடல் பகுதியில் இங்கிலாந்து விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்து எப்-35 ரக போர் விமானம் கடந்த 14ம் தேதி வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டது.
இந்திய கடற்பகுதி எல்லை அருகே பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் எரிபொருள் குறைவாக இருந்தது குறித்து விமானி அறிந்தார். உடனடியாக விமானத்தை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கேட்டார். இதையடுத்து, விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 14ம் தேதி இரவு 9.30 மணிக்கு எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனை தொடர்ந்து விமானத்தில் எரிபொருள் நிரப்பட்டது. விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதனால், விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இங்கிலாந்தில் இருந்து விமானப்படை ஊழியர்கள் வருவதால் 7 நாட்களாக விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து ஊழியர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்தபின்னரே போர் விமானம் மீண்டும் புறப்பட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.