நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புவானிலை ஆய்வு மையம் தகவல்

குஜராத், மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை பெறும் பகுதிகளாக அறியப்படுகின்றன.;

Update:2025-07-01 03:45 IST

புதுடெல்லி,

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இது நீடித்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியுள்ளார்.வழக்கமாக ஜூலை மாதத்தில் சராசரியாக 28 செ.மீ. மழை பொழிவு இருக்கும். இது இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

அந்தவகையில் மத்திய இந்தியா, தெற்கு தீபகற்பத்தையொட்டிய பகுதிகள் கனமழை பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ஒடிசா மற்றும் விதர்பா பிராந்தியத்தை ஒட்டிய பகுதிகள், குஜராத், மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை பெறும் பகுதிகளாக அறியப்படுகின்றன.

இதைத்தவிர உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்கள் கனமழையால் ஆறுகள் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும், எனவே உஷார் நிலையில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.அதேநேரம் வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகள், கிழக்கு இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்