சத்தீஷ்கார்: நக்சலிசம் பாதித்த கிராமத்தில் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தின கொண்டாட்டம்
சிறுவர் சிறுமிகள், கிராமவாசிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் நாராயண்பூர் நகரில் உள்ள அபுஜ்மார் கிராமம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் நக்சலைட்டுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு, போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பி வருகின்றனர்.
இதனால், கிராமம் அமைதியை நோக்கி பயணிக்கிறது. இந்த சூழலில், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட அபுஜ்மார் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
முதன்முறையாக, பலத்த பாதுகாப்புடன் அந்த கிராமத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. கிராமத்தில் மூவர்ண தேசிய கொடி பறக்க விடப்பட்டது.
இதனையொட்டி, சிறுவர் சிறுமிகளின், கிராமவாசிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமத்தினருக்கு படையினர் இனிப்புகளை வழங்கினர்.