பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

குழந்தையின் தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி உள்ளது.;

Update:2025-02-12 03:16 IST

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பொக்குன்னு பகுதியை சேர்ந்தவர் நிசார். இவருக்கு 8 மாதத்தில் முகமது இபாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தையின் தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி உள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை கோட்டப்பரம்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. நிசாரின் முதல் மகனும் இதே போல தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்