‘லிப்ட்’ கொடுத்து அழைத்துச்சென்று வாலிபர் துணிகரம்.. காருக்குள் 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு

வீடு திரும்பும் வழியில், காரில் வந்த ஒரு வாலிபர், ‘லிப்ட்’ தருவதாக கூறி அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றார்.;

Update:2025-09-08 02:04 IST

புவனேஸ்வரம்,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்பாடி நகரில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது அக்காள் வீட்டுக்கு வந்தாள். பின்னர், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை காண மார்க்கெட்டுக்கு சென்றாள்.

வீடு திரும்பும் வழியில், காரில் வந்த ஒரு ஆண், ‘லிப்ட்’ தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்றார். சற்று நேரத்தில் காருக்குள் வைத்து மாணவியை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தரிங்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். புகாரில் சிக்கியவர் திருமணமானவர் என்று தெரிய வந்துள்ளது. தலைமறைவான அவரை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்