உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார்.;

Update:2025-09-17 09:39 IST

ராஞ்சி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகள் சேதம் அடைந்தன. டேராடூனில் நேற்று அதிகாலை ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார். உத்தரகாண்டில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்து மாநிலத்துக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்கள் உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்