‘அதிக இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது’ - கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தி.மு.க. தலைமையில்தான் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.;
கடலூர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“காங்கிரஸ் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடவும், அரசாங்கத்தில் பங்கு பெறவும் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டு காலமாக ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிக்கிறது. எங்கள் கூட்டணி தி.மு.க. தலைமையில்தான்.
தற்போது சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமான சூழல் நிலவுகிறது. அந்த நிலையை மாற்றி, வெற்றி பெறும் அரசாங்கத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்கும் நிலைக்கு நாங்கள் வருவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.