கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update:2025-02-18 18:55 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியை சேர்ந்தவர் ஜோபி அந்தோணி. இவரது மனைவி சர்மிளா. இவர்கள் இருவரும் ஜோபியின் சகோதரர் ஜோஷியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர்.

அப்போது ஜோபி அந்தோணியும், அவரது மனைவி சர்மிளாவும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் ரூ.80 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் அவர்கள் பெரும் தொகையை இழந்துள்ளனர். இதனிடையே ஜோபி-சர்மிளா தம்பதிக்கு கடன் கொடுத்தவர்கள், ஜோபியின் சகோதரர் ஜோஷியை தொடர்பு கொண்டு அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜோஷி, நேற்றைய தினம் மைசூரு தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனை தொடர்ந்து ஜோபி-சர்மிளா தம்பதியினரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல்கள் விஜயநகர் மைதானத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி அருகே தூக்கில் தொடங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

முன்னதாக ஜோஷி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாள் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது சகோதரரும், அவரது மனைவியும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது மற்றும் கடன் வாங்கியது குறித்து பேசியுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்