ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை

மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதற்காக மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-03-17 19:48 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள திரிகால்பூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ஹோலி பண்டிகையின்போது தனது மாமனாரின் முகத்தில் வண்ணப்பொடியை பூசியிருக்கிறார்.

இதனை அந்த பெண்ணின் மாமியார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் விஷத்தை குடித்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்