டிரோன் மூலம் ஏவுகணை ஏவி நடத்தப்பட்ட சோதனை வெற்றி
கர்னூலில் உள்ள டி.ஆர்.டி.ஓ. மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.;
அமராவதி,
இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் ஏவுகணை ஏவி டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆந்திராவின் கர்னூலில் உள்ள டி.ஆர்.டி.ஓ. மையத்தின் சோதனைப்பகுதியில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிரோன் மூலம் ஏவுகணை ஏவும் திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில் இந்த முயற்சி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.